கடலூர் தென்னாட்டு ஜான்சி ராணி தியாகி அஞ்சலை அம்மாள் பேத்தி "ஆர்த்தி" யூ.கே யூத் பார்லிமெண்ட் மெம்பராக தேர்வு.
கடலூர் தென்னாட்டு ஜான்சி ராணி தியாகி அஞ்சலை அம்மாள் பேத்தி ஆர்த்தி யூ.கே யூத் பார்லிமெண்ட் மெம்பராக தேர்வு.
கடலூர் சுதந்திரப் போராட்ட வீராங்கனை, மகாத்மா காந்தியால் "தென்னாட்டு ஜான்சி ராணி" என்று பாராட்டப்பட்ட தியாகிஅஞ்சலை அம்மாள் அவர்களின் பேரப்பிள்ளைகள்
கோ.சூரிய மூர்த்தி-தாரா இவர்களின் மகன்
விஜயமுருகன்-உமாமகேஸ்வரி ஒரே மகள் செல்வி "ஆர்த்தி" லண்டனில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இவரது தனித் திறனாலும், சிறப்பான சேவைப் பணிகளாலும், ஜெம்ஸ்போர்டு & மால்ட்டன் ஆகிய இரண்டு கவுன்சில்களிலும் அதிகமான வாக்குகள் பெற்று பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார்.
இங்கிலாந்தின் இளைஞர், இளைஞிகளுக்கான பாரளுமன்ற உறுப்பினருக்கான (UK Youth Parliament Member) தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இவர் இங்கிலாந்து பாராளுமன்றத்தின் விவாதங்களில் பங்கேற்று இளவயதினரின் குரலாக செயல்படுவார். இங்கிலாந்து அரசாங்கத்தின் அமைச்சர்களையும், உயர் அதிகாரிகளையும் தொடர்ச்சியாக சந்தித்து இளவயதினர் சம்பந்தப்பட்ட அரசாங்க கொள்கைகளை வடிவமைப்பதில் பங்களிக்க வேண்டியது இவரது முக்கிய கடமையாக உள்ளது.
இங்கிலாந்து Chelmsford மற்றும் Maldon Council சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செல்வி ஆர்த்தி தமிழ்நாட்டின் குக்கிராமமான "சித்தாலிக்குப்பம்" என்ற ஊரை பூர்வீகமாகக் கொண்டவராவார்.
இவரின் தேர்வு இந்திய நாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும், குறிப்பாக கடலூருக்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது. இவரை தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு சமூக அமைப்புகளும், பொதுநல அமைப்புகள் சார்பில் பாராட்டுதல்களை தெரிவித்து வருகின்றனர்.
Comments
Post a Comment