Petitioner Disposal Monitoring System" என்ற செயலியை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் துவக்கி வைப்பு!!!

"Petitioner Disposal Monitoring System" என்ற செயலியை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் துவக்கி வைப்பு!!!
கடலூர், ஏப்.20-கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், கடலூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் மனுதாரர்கள் கொடுக்கும் புகார் மனுக்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியும், காவல் உயர் அதிகாரிகள் உடனுக்குடன் தகவல் தெரிந்து கொள்ளும் வகையிலும், உருவாக்கப்பட்ட
"Petitioner Disposal Monitoring System" 
என்ற புதிய செயலியை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. ராஜாராம்  துவக்கி வைத்தார்.
            காவல்துறை உயர் அதிகாரிகள், புதிய செயலியை அவ்வப்போது கண்காணித்து காவல் நிலையங்களில் புகார் மனு சம்பந்தமாக  விவரம் தெரிந்து கொள்ள முடியும்.
           மாவட்ட காவல் அலுவலகத்தில் தனியாக கண்காணிப்பு அறை அமைக்கப்பட்டு காவல் ஆளுநர்கள் புதிய செயலியை தொடர்ந்து கண்காணித்து முதல் தகவல் அறிக்கை (FIR), மனு இரசீது (CSR)பதிவு செய்த விவரம், மருத்துவமனைகளில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி (Hospital Intimation) சட்டபடியான உரிய நடவடிக்கைகள்,  விசாரணை அதிகாரிகள் மனுதாரர்களிடம் நடந்துகொள்ளும்  விதம் குறித்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அறிக்கை சமர்ப்பிப்பார்கள். 
           இப்புதிய செயலி மூலம் காவல் நிலையத்தில் கொடுக்கும் மனுக்கள் மீது தாமதமின்றி, குறித்த காலத்திற்குள் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
          இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார், துணை காவல் கண்காணிப்பாளர்கள் சபியுல்லா, கரிகால் பாரி சங்கர், அசோகன்,  தேவராஜ், தனி பிரிவு காவல் ஆய்வாளர் செந்தில் விநாயகம், காவல் ஆய்வாளர்  குருமூர்த்தி மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.

Comments