சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி முத்திரை(லோகோ) வெளியீடு!

                  சென்னையில்
 திமுக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி முத்திரை(லோகோ) வெளியீடு!

         வேலூர், ஏப்.24-சென்னை, அண்ணா அறிவாலயத்தில் கழக அமைப்பு சாரா ஓட்டுநர் அணியின் முத்திரையை (லோகோ) கழகத் தலைவரும்,  தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்,
கழக பொதுச்செயலாளரும்,  நீர்வளம், சட்டமன்றம், கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சருமான துரைமுருகன் ஆகியோர்
வெளியிட்டனர்.
            முன்னதாக, புதிய மாநில துணைச் செயலாளராக  பொறுப்பேற்றுள்ள
எஸ்.ராஜ்குமார் (சென்னை),
சி.செல்லத்துரை (சேலம்), ஏ.கே.பூபதி (மதுரை) ஆகிய 
 நிர்வாகிகள்  திமுக தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் ஆகியோரை
 நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர்.
           இந்நிகழ்வில், கழக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி மாநில தலைவரும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.எம்.கதிர் ஆனந்த்,
அமைப்புசாரா ஓட்டுநர் அணியின் மாநில செயலாளர் செங்குட்டுவன்,
மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி,
செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.

Comments