வேலூர் மாவட்ட திமுக
இளைஞரணி அமைப்பாளர்
தேர்வுக்கான நேர்காணல்...
வேலூர், ஏப்.01-சென்னை, தேனாம்பேட்டையில் அமைந்துள்ள தி.மு.க., இளைஞரணி அலுவலகமான அன்பகத்தில் வேலூர் மாவட்ட தி.மு.க., இளைஞரணி அமைப்பாளருக்கான நேர்காணல்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
ஒரு கிளைக் கழகத்தில் தொடங்கி, வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத் தலைவராக உயர்ந்து, இன்றைக்கு மாமன்ற உறுப்பினராக இருந்து,
மக்கள் மனங்களிலும் இடம்பிடித்த இந்த எளியவனை வேலூர் மாவட்ட இளைஞரணி நேர்காணலில் கலந்துகொள்ள வாய்ப்பு வழங்கிய தமிழ்நாடு நீர்வளம் மற்றும் கனிமத்துறை அமைச்சர் துரைமுருகன் எம்.எல்.ஏ.வும், வேலூர் மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினரருமான ஏ.பி.நந்தகுமாருக்கும் வேலூர் பாராளுமன்ற உறுப்பினரும், கழக அமைப்பு சாரா தொழிலாளர் அணி மாநில தலைவருமான டி.எம்.கதிர்ஆனந்த்துக்கும்,
வேலூர் மாநகர செயலாளரும், வேலூர் சட்டமன்ற உறுப்பினருமான ப.கார்த்திகேயனுக்கும், வேலூர் மாநகராட்சி துணை மேயரும், காட்பாடி தெற்கு பகுதி கழகச் செயலாளருமான எம்.சுனில் குமாருக்கும்,
எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என் இறுதி மூச்சு உள்ளவரை கழகத்திற்காக அரும்பாடு படுவேன் என்ற உறுதியோடு நேர்காணலை சந்தித்து திரும்பினேன் என தெரிவித்துள்ளார் டீட்டா சரவணன்.
டீட்டா சரவணன் வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்ற தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது பணியை மெச்சாதவர்களே யாரும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு இவரது பணி மிகவும் சிறப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், 32 நாட்கள் தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாடி தமிழக அளவில் உள்ள உடன்பிறப்புகள் நெஞ்சில் மட்டுமல்லாது, அமைச்சர்கள், தமிழக முதல்வர் என்று அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் டீட்டா சரவணன் என்று சொன்னால் அது மிகையாகாது.
அதேபோன்று இந்த பிறந்தநாள் விழா தமிழகமெங்கும் வேறெங்கும் இல்லாத வகையில் வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மட்டுமே நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதோடு மட்டுமின்றி அமைச்சர் உதயநிதியின் நடிப்பில் வெளிவந்த கண்ணை நம்பாதே திரைப்படத்தை ரசிகர்கள் வெள்ளத்தில் மிதக்க வைத்ததோடு, பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளையும் இந்த திரைப்படத்தை காணச் செய்து ஒரு புதுமையை படைத்தவர் இந்த மாமன்ற உறுப்பினர் டீட்டா சரவணன்.
இவரது செயல்பாடுகள் என்னவென்று திமுகவில் உள்ள உடன்பிறப்புகள் மற்றும் அமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்கு தெரியும். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெஞ்சத்தில் நிறைந்துள்ள டீட்டா சரவணனுக்கு இந்த வாய்ப்பு கட்டாயம் கிடைக்கும் என்று உறுதியாக கூறுகின்றனர் திமுகவில் உள்ள உடன்பிறப்புகள்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் முடிவு, எண்ணம் என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Comments
Post a Comment