மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 543-ல் இருந்து 884 ஆக அதிகரிக்குமா?வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் கேள்வி!
மக்களவை தொகுதிகளின்
எண்ணிக்கை 543-ல் இருந்து 884 ஆக அதிகரிக்குமா?
வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் கேள்வி!
வேலூர், ஏப்.06-
மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை நிர்ணய குழுவின் முடக்கம் 2026 ஆம் ஆண்டு முடிவடைந்தவுடன், தற்போதைய மக்களவைத் தொகுதியின் எண்ணிக்கையான 543-ல் இருந்து 884 ஆக அதிகரிக்குமா?. அதன்படி நாடெங்கும் உள்ள மக்களவைத் தொகுதியில் மாநிலம் வாரியாக எண்ணிக்கை விவரங்கள் குறித்து நாடாளுமன்ற மக்களவையில் திமுக எம்.பி., கதிர் ஆனந்த் கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய அமைச்சர் மழுப்பலான பதிலை அளித்துள்ளார்.
2026-ஆம் ஆண்டு நாட்டில் உள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை வரையறை நிர்ணய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா?. அவ்வாறாயின் அதன் விவரங்கள் யாவை?. மாநிலங்களில் மக்களவைத் தொகுதி எண்ணிக்கை வரையறை நிர்ணய நடவடிக்கைக்கு பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் மற்றும் வழிமுறைகளின் விவரங்கள் யாவை? மக்களவை தொகுதி எண்ணிக்கை நிர்ணய குழுவின் முடக்கம் 2026 ஆம் ஆண்டிற்குள் முடிவடைந்தவுடன் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை தற்போதைய 543-ல் இருந்து 884 ஆக அதிகரிக்குமா?. அதன்படி நாடெங்கும் உள்ள மக்களவைத் தொகுதிகளின் மாநிலம் வாரியாக எண்ணிக்கை விவரங்கள் யாவை? இதற்கு ஒன்றிய அரசின் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு எழுத்து பூர்வமாக அளித்துள்ள பதில் விவரம் வருமாறு:
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 82 170 330 மற்றும் 332 ஆகியவை மக்களவை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள சட்டப்பேரவை தொகுதிகளின் எண்ணிக்கை வரையறை நிர்ணயத்தை நிர்வகிக்கிறது.
கடந்த தொகுதி எண்ணிக்கை வரையறை நிர்ணய ஆணை 2006 உடன் இந்த அனைத்து விதிகள் தொடர்பான தகவல்களும் தேர்தல் ஆணையத்தின் இணையதளமான https://evi.gov.inல் "டிலிமிட்டேஷன்" என்ற தலைப்பின் கீழ் கிடைக்கும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட குடும்ப கட்டுப்பாட்டு திட்டங்களின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு அரசியலமைப்பு 84 வது திருத்தம் சட்டத்தின்படி 2000 முதல் 2026 வரை நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை வரையறை நிர்ணயம் நீட்டிக்கப்பட்டது.
தேசிய மக்கள் தொகை கொள்கை அடிப்படையில் ஒரு பகுதியாக மக்கள் தொகை உறுதிப்படுத்தலுக்கான நிகழ்ச்சி நிரலை மாநில அரசுகள் தொடர உதவும் ஒரு ஊக்கமூட்டும் நடவடிக்கையாக 2026 ஆம் ஆண்டு வரை புதிய எண்ணிக்கை வரையறை நிர்ணயத்தை மேற்கொள்வதற்கான தடையை நீட்டிக்க முடிவு செய்தது.
இதை இதற்காக அமைக்கப்பட்ட தொகுதி எண்ணிக்கை வரையறை நிர்ணய ஆணையம் உரிய நேரத்தில் முடிவு செய்யும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது என்று பதில் அளித்துள்ளார் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு.
Comments
Post a Comment