டெல்லியில் முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி 2023-ஆம் ஆண்டிற்கான தேசிய சட்ட தின விருது வழங்கல்!

டெல்லியில் முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு  முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி 2023-ஆம் ஆண்டிற்கான தேசிய சட்ட தின விருது  வழங்கல்!
திருச்சி, ஏப்.20- தலைநகர் டெல்லியில்  உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் கௌரவ தலைவருமான நீதியரசர் எம்.கற்பகவிநாயகம் அவர்கள், சட்டத் துறையில் வழக்கறிஞராக, நீதிபதியாக, நீதியரசராக கடந்த 50 ஆண்டுகாலமாக சிறப்பாக பணியாற்றி வருவதை போற்றும் விதமாக,  அவருக்கு  தலைநகர் டெல்லியில் உச்சநீதிமன்றம் எதிரில் உள்ள கூட்டரங்கில் முன்னாள்  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி  நீதியரசர் Dr.K.G. பாலகிருஷ்ணன் மற்றும்  ஆல் இந்தியா பார் கவுன்சில் அசோசியேஷன் சேர்மேன் Dr.ஆதிஷ்.C.அகர்வாலா ஆகியோர் இணைந்து  இந்த 2023-ஆம் ஆண்டிற்கான தேசிய சட்ட தின விருதினை வழங்கி சிறப்பித்தனர்.
           இந்நிகழ்வில் மூத்த நீதிபதிகள், மூத்த  வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை மற்றும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.  நீதியரசர் எம். கற்பகவிநாயகம்,  இன்றைய இளைய தலைமுறை வழக்கறிஞர்களுக்கும், நீதிபதிகளுக்கும் ஒரு ரோல் மாடலாகவும், சட்டத்துறையில் எப்படி நேர்மையாக நியாயமாக சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்பதற்கு உதாரணமாக உள்ளார் என்று அனைவரும் பாராட்டினர். 
            இச்சிறப்பான விருதினை பெற்ற  நீதியரசர் எம்.கற்பகவிநாயகம் அவர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் மேலும் தனது சட்டபணிகளை சிறப்பாக செய்ய அவருக்கு அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் நிறுவனரும் தலைவர் ஆர்.கே.குமார் சார்பிலும் பொதுச்செயலாளர் முனைவர். வி.எச். சுப்ரமணியம் சார்பிலும், அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியுமான ஆர்.ஏ.தாமஸ் சார்பிலும், மற்றும் கோவை, நீலகிரி, திருப்பூர், திருச்சி, சென்னை, மதுரை மாவட்டத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் சார்பிலும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொண்டனர்.

Comments