வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தனியார்பள்ளி உரிமையாளர்கள் சார்பில் டி.இ.ஓ.வைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!!!

             வேலூர்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தனியார்பள்ளி உரிமையாளர்கள் சார்பில் டி.இ.ஓ.வைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!!!
           வேலூர், மார்ச் 26-வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தனியார் பள்ளி அங்கீகாரம் மற்றும் அங்கீகாரத்தை புதுப்பிக்க பள்ளி நிர்வாகிகளை மிரட்டி பல ஆயிரக்கணக்கில் லஞ்சம் வாங்கும் வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் தாம்சனை கண்டித்து தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், ஹையர் செகண்டரி பள்ளிகளின் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
            இதில் மாநிலத் தலைவர் நந்தகுமார், மாநில பொதுச் செயலாளர் சதீஷ், பொருளாளர் நடராஜன், பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர், ஆசிரியைகள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Comments