கிராம உதவியாளர் பணிக்கான பணி நியமன ஆணைகளை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்...

கிராம உதவியாளர் பணிக்கான பணி நியமன ஆணைகள் வழங்கினார் அமைச்சர் துரைமுருகன்! 

            வேலூர், மார்ச் 26-கிராம உதவியாளர்கள் பணிக்கான பணி நியமன ஆணைகளை பயனாளிகளுக்கு நேற்று  அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.
          வேலூர் மாவட்டம், காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இளையநெல்லூர், காங்கேயநல்லூர், தலையாரம்பட்டு மற்றும் எருக்கம்பட்டு ஆகிய நான்கு கிராமங்களில் உதவியாளர் பணிக்கான பணி நியமன ஆணையை   தமிழ்நாடு நீர்வளம், சட்டமன்றம், கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் துரைமுருகன்  வழங்கினார். 
           இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, வருவாய் கோட்டாட்சியர் கவிதா, காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Comments