தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் கடும் கண்டனம் !*

⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫


*30 - 03 - 2023*

*- டி.எஸ்.ஆர்.சுபாஷ் !*

*நேற்று 29.-03-2023 புதன்கிழமை, கோவை மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு  பகுதியில் கல் குவாரி தொடர்பாக செய்தி சேகரிக்க நியூஸ்  தமிழ் செய்தி தொலைக்காட்சி நிருபர் மற்றும் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர், தோழர் அருண்குமார் மற்றும் ஒளிப்பதிவாளர் பாலாஜி  ஆகியோர் அங்கு சென்றுள்ளனர் !*
 
*செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஒளிப்பதிவாளர் பாலாஜி மீது சமுக விரோத் கும்பல். ஒன்று , தகாத வார்த்தைகளால் மிரட்டியதுடன் தாக்குதல் நடத்தியுள்ளது .மேலும் ஒளிப்பதிவு  கருவியை கைப்பற்ற முயற்சி செய்துள்ளனர்!*

*இந்த தாக்குதலில் காயமடைந்த நியூஸ் தமிழ்  செய்தி தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் பாலாஜி கோவை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார்.*

*கோவை மாவட்ட காவல்துறை உடனடியாக இதில் ஈடுபட்ட குண்டர்களை கைது செய்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் வலியுறுத்துகிறது !*

*இது போன்ற நிலை தொடந்து வருவதால், மாண்புமிகு முதல்வர் பத்திரிகையாளர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று டி.யூ.ஜே வேண்டுகோள் விடுக்கின்றது !*

*டி.எஸ்.ஆர்.சுபாஷ் !*
*மாநில தலைவர்*
*தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் ( TUJ )*
*9444111494*


⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫

Comments