இந்தியாவின் மூத்த அரசியல்வாதி!தொடர் வெற்றிகளை குவித்து வரும் திமுக நாயகன் காட்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துரைமுருகன்!!!
இந்தியாவின் மூத்த அரசியல்வாதி!
தொடர் வெற்றிகளை குவித்து வரும் திமுக நாயகன் காட்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துரைமுருகன்!!!
வேலூர், மார்ச் 28-
இந்தியாவின் மூத்த அரசியல்வாதியாகவும், தமிழக சட்டமன்ற தேர்தலில் 14 முறை தொடர் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தவர் தான் திமுக நாயகன் காட்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துரைமுருகன்.
தமிழகத்தில் மொத்தம் 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் காட்பாடி தொகுதி தன்னிறைவு பெற்ற தொகுதியாக விளங்குகிறது. இதற்கு அடிப்படை காரணமும், வித்திட்டவருமாக திகழ்பவர் திமுக சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன் தான் என்று சொன்னால் அது மிகையாகாது.
திமுக நாயகன் துரைமுருகனின் சாதனைகளை உலக அரங்கில் பேச வேண்டும் என்று சொன்னால் அதுவும் மிகையாகாது. இப்படி இவரது சாதனைகளை சொல்லிக்கொண்டே செல்லலாம். ஆதலால் இவர் இருக்கும் போதே இவருக்கு திமுக சார்பில் ஒரு மிகப்பெரிய பாராட்டு விழா நடத்தி அவரை கௌரவப்படுத்த வேண்டும் என்று மூத்த அரசியல்வாதிகளும், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும், குறிப்பாக காட்பாடி பகுதி வாழ் பொதுமக்களும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
அதேபோன்று மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ராமச்சந்திரன் அதிமுக என்று ஒரு தனிக்கட்சியை தொடங்கிய போது துரைமுருகனை தன்னுடன் வருமாறு அழைப்பு விடுத்தார். ஆனால் துரைமுருகன் கலைஞரை விட்டு நான் என்றும் வர மாட்டேன் என்று உறுதியாக, தான் எடுத்த கொள்கையிலும், திமுகவின் மீது அவர் வைத்திருந்த பாசத்தாலும், பற்றாலும் அவர் திமுகவிலேயே தங்கி விட்டார். இதுதான் அவர் வளர்ந்த வரலாறு.
தான் எடுத்த முடிவில் சற்றும் பின் வாங்காமல் தொடர்ந்து கழகப் பணியாற்றி வந்துள்ளார். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகள் இருந்தாலும் காட்பாடி தொகுதி அனைத்திலும் முன்னோடி தொகுதியாக முதல் தொகுதியாக தன்னிறைவு பெற்ற தொகுதியாக கொண்டு வந்த பெருமை துரைமுருகனையே சாரும்.
காட்பாடி தொகுதியில் இல்லாத அடிப்படை வசதிகளே இல்லை. பல்கலைக்கழகம், அரசு மகளிர் கல்லூரி, பள்ளிகள், அரசு சட்டக் கல்லூரி, பி.எட்., கல்லூரி, நீதிமன்ற வளாகம், அரசு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனை, ரயில் சந்திப்பு நிலையம் என்று சொல்லிக் கொண்டே செல்லலாம்.
காட்பாடி தொகுதிக்கு துரைமுருகன் கிடைத்தது பொதுமக்களின் பேரதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும். காட்பாடி தொகுதி மக்களுக்கு என்னென்ன தேவை என்று பார்த்து பார்த்து செய்து வருபவர் தான் அமைச்சர் துரைமுருகன். அவர் அமைச்சராக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் சரி தனது தொகுதிக்கு தேவையான ஒவ்வொன்றையும் தொடர்ந்து இன்று வரை செய்து வருவதில் அவர் என்றும் குறை வைத்தது கிடையாது. இதுதான் அவரது தொடர் வெற்றிக்கு காரணம்.
நான் இருந்தாலும், மறைந்தாலும் துரைமுருகன் விட்டுச் சென்றது, துரைமுருகன் செய்தது என்று தனது பெயர் இருக்க வேண்டும் என்று எண்ணி எண்ணி இந்த தொகுதியை இழைத்து அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ள ஒரு தொகுதியாக மாற்றி வருகிறார் துரைமுருகன் என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மை. மேடைக்கு மேடை அவர் சொல்வது முழங்குவது எல்லாம் காட்பாடி தொகுதி எனக்கு கோயில். காட்பாடி தொகுதி மக்கள் எனக்கு கடவுள் என்று கூறுவது இதைத்தான் என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள்.
தமிழக முதல்வர் தங்க தளபதி மு.க.ஸ்டாலினே, துரைமுருகனின் செயல்பாடுகளை பார்த்து வியக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். தெளிவான பேச்சு, தெளிவான நடை, தெளிவான முடிவு எடுப்பதில் இவர் வல்லவர். இவருக்கு நிகர் இவர்தான் என்று சொன்னால் தகும்.
இன்னும் அவரால் காட்பாடி தொகுதி வளம் பெறும், நலம் பெறும் என்று சொல்லலாம். அவரது மக்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
Comments
Post a Comment