விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை, காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் திறந்து வைத்தார் !!

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் திறந்து வைத்தார் !!
காஞ்சிபுரம், மார்ச் 27-காஞ்சிபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அமோக நெல் விளைச்சல் காரணமாக முன்கூட்டியே நெல் அறுவடை செய்யப்பட்ட நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று காஞ்சிபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல்கதிர்பூர், பெரும்பாக்கம்,தாமல், முசரவாக்கம், கீழ்அம்பி,சிறுணை பெருகல், கூரம் பகுதிகளில் அமைக்கப்பட்ட அரசு நேரடி நெல் கொள் முதல் நிலையங்களை 
காஞ்சிபுரம் ஒன்றியக்குழு பெருந்தலைவர் மலர்கொடி குமார் முன்னிலையில், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் 
சிறுவேடல் க.செல்வம் மற்றும் காஞ்சிபுரம் எம்.எல்.ஏ சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகளை வழங்கினார்.
         விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று உடனடியாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளதால் காஞ்சிபுரம் ஒன்றியத்திலுள்ள விவசாயிகள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
         இந்நிகழ்ச்சிகளில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.ஏழரசன், மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் நித்யா சுகுமார், காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார் மற்றும் ஊராட்சிமன்ற தலைவர்கள் 
மேல்கதிர்பூர் பேபி சேட்டு, கூரம் இந்திரா ஜோசப், தாமல் சண்முகம், முசரவாக்கம் அம்பிகா ரவி, கிழ்அம்பி மகாலட்சுமி ராஜசேகர் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் ஒன்றிய துணைச் செயலாளர் இளஞ்செழியன், ஒன்றிய குழு உறுப்பினர் இராம்ப்ரசாத், ஒன்றிய கவுன்சிலர் விமல் ராஜ், கூரம் ரமேஷ் உள்பட நிர்வாகிகள், விவசாயிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.

Comments