சேலத்தில்
சௌராஷ்டிரா தமிழ் சங்கமம்!
சேலம், மார்ச் 26-மத்திய அரசும், குஜராத் மாநில அரசும் இணைந்து சௌராஷ்டிர தமிழர்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, உள்ளூர் மக்களையும், சௌராஷ்டிரா தமிழர்களையும் கவர்ந்திழுக்கும் வகையில் சாலைக் கண்காட்சியை நடத்துகிறது. சௌராஷ்டிரா தமிழர்கள் குறித்து அரசு அதிகாரிகள் தெரிவிக்கையில், குஜராத்தின் சௌராஷ்டிராவில் 17.04.2023 முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “சௌராஷ்டிர தமிழ் சங்கமம்” என்ற 15 நாள் திருவிழாவில் பங்கேற்க உள்ளூர் மக்களையும் அழைத்தனர்.
சௌராஷ்டிர தமிழ் சங்கமம் மூலம், 3,000 பங்கேற்பாளர்களுக்கு சௌராஷ்ட்ரிய தமிழர்களின் வரலாறு, கலைஞர்களின் வாழ்க்கை, பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் சௌராஷ்டிரர்களின் கலாச்சார நடைமுறைகள் ஆகியவற்றை வாழ்நாளில் ஒருமுறை காணமுடியும்.
ஒரு சமூகம் தமிழ்நாட்டிற்கு குடிபெயர்ந்த விதம் மற்றும் நாட்டிற்கு அவர்கள் செய்த பங்களிப்புகள் பற்றிய சொல்லப்படாத வரலாறுகளை விவரிப்பதன் மூலம் இந்திய கலாச்சாரத்தின் ஒற்றுமையை இந்த நிகழ்ச்சி எடுத்துக்காட்டுகிறது.
செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய ஒன்றிய அரசின் ஜவுளி மற்றும் ரயில்வேக்கான இணை அமைச்சர் தர்ஷ்ன்பென் ஜர்தோஷ்,“தமிழ்நாட்டின் ஜவுளித் தொழிலுக்கு சேலம் ஒரு முக்கிய மையமாக உள்ளது. மேலும், சௌராஷ்டிர தமிழர்கள் உள்ளூர் உணவு வகைகளிலும், துணிகளுக்கு நெசவு மற்றும் சாயமிடுதல் ஆகியவற்றிலும் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.
சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் என்ற யோசனைக்கு ஒரு தசாப்தத்திற்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியால் அடித்தளம் போடப்பட்டது. குஜராத் மாநில அரசு மேற்கொண்டுள்ள பல முயற்சிகளில் திண்டுக்கல்லில் ரோடு ஷோவும் ஒன்று.
சமீபத்தில் 19 மார்ச் 2023 அன்று சென்னையில் இதேபோன்ற ஒரு சாலைக் கண்காட்சி (Road Show) ஏற்பாடு செய்யப்பட்டது. சேலத்தை தவிர, மதுரை, பரமக்குடி, சேலம், திண்டுக்கல், கும்பகோணம், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சி ஆகிய நகரங்களிலும் மாநில அரசு சாலைக் காட்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment