கோவை மாவட்டத்தில் அரசு ஊழியர் சங்கங்களின் மனித சங்கிலி போராட்டம்

24.03.2023
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் வழங்கிய தேர்தல் வாக்குறுதியான வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கவன ஈர்ப்பு மனித சங்கிலி போராட்டம் 24/3/2003 அன்று கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்றது. தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்துறை சங்கங்களின் கூட்டமைப்புகள் சேர்ந்து இந்தப் போராட்டம் நடைபெற்றது. இதில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் பயன் அளிக்கும் பழைய பயனளிப்பு ஓய்வூதிய திட்டத்தை வழங்கிட கோரியும், அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடக்கோரி, தொகுப்பு ஊதியம் மற்றும் புற ஆதார முறையினை கலைந்து அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்கிடவும் பறிக்கப்பட்ட சரண்டர் அகவிலைப்படி நிலுவையை தொகையினை வழங்கிட கோரியும் இப் போராட்டம் நடைபெற்றது.

Comments