புதிய இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் கட்டுமானப் பணியில் தரமில்லை என குற்றச்சாட்டு:மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு:
புதிய இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் கட்டுமானப் பணியில்
தரமில்லை என குற்றச்சாட்டு:
மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு:
காட்டுமன்னார்கோவில், மார்ச் 21-
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளது.
இந்த முகாமில் வசிக்கும் மக்களுக்காக தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பில்
ருத்திரசோலை ஊராட்சியில்
ரூ.3 கோடியே 60 இலட்சம் மதிப்பீட்டில் புதிய 72 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கட்டுமான பணி தரமானதாக, உறுதியாக இல்லை எனவும், ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும் எனவும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் மக்கள் தங்கள் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், சட்டமன்ற உறுப்பினர்
ஆகியோருக்கு மனுவாக அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து புகாரின் அடிப்படையில் நேற்று மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து உதவி பொறியாளர் சந்தான கிருஷ்ணனிடம்
பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
அதன் பின்னர் அங்கு பயன்படுத்தப்படும் சிமெண்ட், மண் கலவையை ஆய்வுக்கு எடுத்து சென்றார்.
மேலும், கட்டுமானப் பணியில் ஏதாவது குறைகள் இருந்தால் பணியினை உடனடியாக நிறுத்தி விடுவேன்
என எச்சரிக்கை விடுத்தார்.
மேலும்,
வீடு கட்டும் பணியினை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின் போது கூடுதல் ஆட்சியர் மதுபாலன்,
வட்டாட்சியர் தமிழ் செல்வன்,
வட்டார வளர்ச்சி அலுவலர்கள்
சுகுமார், பாலகிருஷ்ணன்,
செயற்பொறியாளர் தணிகாசலம்
மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் தலைவர் சுமன், முகாம் வாசிகள்
உடன் இருந்தனர்.
Comments
Post a Comment