எனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி! வேலூர் தொகுதி எம்.பி., கதிர் ஆனந்த்!!
வேலூர், ஜன.21-கடந்த 19.01.2023 ஆம் தேதியன்று எனது பிறந்தநாளை முன்னிட்டு நேரிலும், தொலைபேசி வாயிலாகவும், வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் மூலமாகவும் என்னை வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் முதற்கண் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
என்னை வாழ்த்திய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற இந்நாள் மற்றும் முன்னாள் உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள், கழக உறுப்பினர்கள், நண்பர்கள், வேலூர், அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.உங்கள் மதிப்புமிக்க வாழ்த்துக்களை அன்போடும், பொறுப்போடும் மகிழ்ச்சியுடன் இதயப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன்.
உங்கள் வாழ்த்துக்கள் *என்னை பன்மடங்கு உற்சாகப்படுத்தி மென்மேலும் கழக பணிகளையும், மக்கள் நலப்பணிகளையும் தொய்வின்றி செய்துவர உற்சாகம் ஊட்டுகிறது. என்னை இந்த உலகம் மதிக்கக்கூடிய வகையில் வளர்த்த என் தாய், தந்தைக்கும், பாசமான என் மனைவி மக்களுக்கும், என்னை ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக மக்கள் சேவை செய்ய வாய்ப்பளித்த நம் முதலமைச்சரும், தலைவருமான தளபதிக்கும் என் வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டவனாக இருப்பேன் என்று உறுதி அளிக்கிறேன்.
நீங்கள் என் பால் மற்றும் என் குடும்பத்தார் மீது வைத்திருக்கக்கூடிய அன்பிற்கும், மரியாதைக்கும் என்றும், நான் நன்றி மறவாமல் இருப்பேன் என்று தெரிவித்துக் கொண்டு, மீண்டும் ஒரு முறை நீங்கள் என் பிறந்தநாளில் வாழ்த்தியமைக்கு நன்றி கூறுகிறேன். உங்கள் நண்பன் டி.எம்.கதிர் ஆனந்த்,
வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் என்று குறிப்பிட்டு தனது நன்றியறிவிப்பு மடலில் தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment