தி ரேடியாலஜிக்கல் அசிஸ்டன்ட் அசோசியேஷன் செயற்குழு கூட்டம்


பாரம்பரியமிக்க சங்கமான TRAAமாநில செயற்குழு கூட்டம் கோவையில் 22.1.2023 அன்று நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து TRAA மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். காலி பணியிடங்கள்  நிரப்புதல் , புதிய பணியிடங்கள் உருவாக்கம் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  
மாநில தலைவர்  திரு .மோ. ஞான தம்பி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மாநில பொது செயலாளர் மற்றும் அமைப்புச் செயலாளர்  முன்னிலை வகித்தனர். இதில் மாநில துணைத் தலைவர்கள்  மற்றும் மாநில செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
 பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகிகள் உரையாற்றினர் இதில்

 1.காலிப்பணியிடங்களை முறையான ஊதிய விகிதத்தில் நியமனம் செய்ய வேண்டும்.

2. அவுட்சோர்சிங் /காண்ட்ராக்ட் முறை நியமனம் ரத்து செய்து காலமுறை ஊதியத்தில் பணி நியமிக்க வேண்டும்.

3. அரசு விதிகளுக்கு புறம்பாக 18 மணிநேரம் பணிபுரிய நிர்பந்திப்பதை தடுக்க வேண்டும்.

4. CXRT/ Radiographer/ DRA பணியிட மாறுதலுக்கு interdirectorate Transfer கவுன்சிலிங் நடத்திட வேண்டும்.

உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கோவை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், 
இக்கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தினர்.

Comments