வேலூர் எம்.பி., கதிர் ஆனந்துக்கு பிறந்தநாள் பரிசாக *வீரவாள்* மற்றும் *தின காற்று* நாளிதழ் வழங்கிய காட்பாடி வட்ட செயலாளர் விநாயகம்!
வேலூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் எம்.டி.கதிர் ஆனந்துக்கு நேற்று பிறந்தநாள். இதையொட்டி அவர் சென்னையில் உள்ள திமுக பொதுச் செயலாளரும், நீர் வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் இல்லத்தில் தனது தந்தை, தாய் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள திமுகவினர் திரளாக படையெடுத்து சென்னையில் உள்ள துரைமுருகன் இல்லத்தில் எம்.பி.கதிர் ஆனந்தின் பிறந்தநாளை கொண்டாடி வாழ்த்து தெரிவித்தனர். இப்படி வாழ்த்து தெரிவித்த உடன்பிறப்புகளில் வேலூர் மாவட்டம் ,காட்பாடி கிளித்தான்பட்டறை பகுதி 5-வது வார்டு வட்ட செயலாளர் பி.விநாயகம் ஒரு கிலோ எடை கொண்ட வெள்ளி வீரவாளை பிறந்தநாள் பரிசாக டி.எம்.கதிர் ஆனந்துக்கு கொடுத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அத்துடன் அவருக்கு பட்டு துணியாலான அங்கவஸ்திரம் கொடுத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தார் .இந்த நிகழ்வின்போது காட்பாடி வடக்கு பகுதி திமுக செயலாளர் வன்னிய ராஜா, மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.ஒரு கிலோ வெள்ளி வீரவாள் மற்றும் பட்டு அங்க வஸ்திரத்தை பெற்றுக்கொண்டு வட்ட செயலாளர் விநாயகத்துக்கு தனது நன்றியை உரித்தாக்கினார் எம்.பி., கதிர் ஆனந்த்.
Comments
Post a Comment