மேல் நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவுகளை கலந்த நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
புதுக்கோட்டை மாவட்டம் இருளர் இன மக்கள் வாழும் வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல் நீர்த்தேக்க தொட்டியில் சமீபத்தில் மனித கழிவுகளை கலந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது
இதனை எடுத்து மனிதக் கழிவுகளை மேல் நீர்த்தேக்க தொட்டியில் கலந்த மர்ம நபர்கள் குறித்து புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இன்னும் குற்றவாளிகளை கைது செய்யவில்லை எனவும் குற்றவாளிகளை கைது செய்வதில் மாவட்ட காவல்துறை மெத்தனமாக செயல்படுவதாகவும் காவல்துறையை வழி நடத்தும் தமிழக அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் நீலவானத்து நிலவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
திருவள்ளூர் மருத்துவ கல்லூரி அருகே நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த விடுதலை சிறுத்தை நிர்வாகிகள் கலந்து கொண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவுகளை கலந்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதுவரை நடவடிக்கை எடுப்பதில் மெத்தனம் காட்டி வரும் மாவட்ட காவல் துறை மற்றும் தமிழக அரசை கண்டித்து கண்டன உரையாற்றினார்

Comments
Post a Comment