தேனி, ஜன.20- தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி பேரூராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களாக கடந்த ஐந்து ஆண்டுகளாக கார்த்திக் மற்றும் ஹரிஹரன் ஆகியோர் பணி புரிந்து வந்தனர். மேலும் புதிதாக பேரூராட்சியில் பொறுப்பேற்றவர்கள் பணம் கேட்டு பணம் கொடுக்காத காரணத்தால் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், பணியில் இருந்து பேரூராட்சி நிர்வாகம் நீக்கம் செய்துள்ளது என்றும் இதனால் அதிர்ச்சி அடைந்த கொசு ஒழிப்பு பணியாளர்கள் , மீண்டும் கொசு ஒழிப்பு பணி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கொசு ஒழிப்பு பணியாளர்கள் கார்த்திக் மற்றும் ஹரிஹரன் ஆகியோர் தேவதானப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Comments
Post a Comment