திருவள்ளூரில் வரும் 25ஆம் தேதி மொழிப்போர் தியாகிகளுக்கான நடைபெறும் பொதுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் கலந்து கொண்டு மொழிப்போர் தியாகிகளுக்கான வீர வணக்க உரை நிகழ்த்தி நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது இதனை அடுத்து திருவள்ளூர் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று அமைச்சர் சாமு நாசர் தலைமையில் தமிழக முதல்வரை வரவேற்பது மற்றும் பொதுக்கூட்டத்திற்கு அதிகப்படியான கூட்டத்தை கூட்டுவதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த நிலையில் பொதுக்கூட்டம் திருவள்ளூர் அடுத்த ஊத்துக்கோட்டை சாலையில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது, பொதுக்கூட்டம் நடைபெற உள்ள இடத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ஆவடி சாமு நாசர் மற்றும் திருத்தணி சட்டமன்ற உறுப்பினரும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் திருத்தணி சந்திரன் உள்ளிட்டோர் பணிகள் நடைபெறும் இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர், மேலும் பொதுக்கூட்டம் வரைபடத்தை ஆய்வு செய்து வாகன நிறுத்தும் இடம் முதல்வர் வரும் வழி பொதுமக்கள் உட்காருமிடம் ஆகியவற்றிற்கான வரைபடத்தை ஆய்வு செய்து பணிகளை விரைவாக முடிக்கவும் கட்சியினருக்கு உத்தரவிட்டார் இதனைத் தொடர்ந்து முதல்வர் திருவள்ளூர் வருகை ஒட்டி நெடுஞ்சாலையில் ஓரங்களில் உள்ள மண்ணை அள்ளுவது நெடுஞ்சாலை தடுப்புகளில் வர்ணம் பூசுவது உள்ளிட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது

Comments
Post a Comment