திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் தஞ்சை கடலூரில் 50 நாட்களுக்கு மேல் போராடி வரும் கரும்பு விவசாயிகளை ஆதரித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்களை எழுப்பி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பி. இராமநாதன் விவசாய சங்க மாவட்ட பொருளாளர் தலைமை வகித்தார், மு.க. முருகானந்தம் விவசாய சங்க வட்ட தலைவர், எல். சத்தியமூர்த்தி விவசாய சங்க வட்டச் செயலாளர், சி. சுந்தரம் விவசாய தொழிலாளர் சங்க வட்ட செயலாளர், க. முருகன் விவசாய தொழிலாளர் சங்க வட்ட தலைவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஆர். நடராஜன் விவசாய சங்க மாவட்ட செயலாளர், வி. சிதம்பரம் விவசாய சங்கம் மாவட்ட தலைவர், எம். பாலு விவசாய சங்க மாவட்ட துணைத்தலைவர், எஸ். முருகேசன் விவசாய சங்க மாவட்ட துணை செயலாளர் மாவட்ட துணை செயலாளர், கே. சேகர் விவசாய சங்க மாவட்ட துணை தலைவர், பி. வரதராஜன் சி பி ஐ எம் வட்டச் செயலாளர் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள் மற்றும் டைலர் சுப்ரமணி, கே. சுப்பிரமணி, வி. தர்மலிங்கம், எஸ். வேலாயுதம், எஸ். பண்ணைக்காரன், பி. தேவராஜ் கட்டுமானம், எஸ். வேதநாயகம், பி.வடிவேல், எம். சின்னத்துரை, கே. மாரிமுத்து, எம். மல்லிகா, ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் 1. தஞ்சை கடலூர் மாவட்டங்களில் உள்ள ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பாக்கி பணத்தை உடன் வழங்க வேண்டும் கோரியும். 2. ஆருடன் சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகள் பெயரில் சுமார் 200 கோடி ரூபாய் வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்துள்ளது. உடன் ஆலை பெயரை கடனை மாற்றக்கோரியும், 3. கரும்பு விவசாயிகள் பெயரில் மோசடியாக கடன் வாங்கிய ஆலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுத்திடக் கோரியும், 4. தமிழ்நாடு அரசு உடன் தலையிட கோரி தொடர்ந்து விவசாயிகள் 50 நாட்களுக்கு மேலாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பாக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் தொட்டியம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. இதில் ஏராளமான தமிழ்நாடு விவசாய சங்க தொட்டியம் வட்டகுழு திருச்சி புறநகர் மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
V.ராஜ்குமார்
தொட்டியம் தாலுக்கா
செய்தியாளர்

Comments
Post a Comment