தொட்டியம், ஜனவரி -18 திருச்சி மாவட்டம்




தொட்டியம் அருகே காவிரி ஆற்றில் அம்மாயி அழைக்கும் நிகழ்ச்சி பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது 

                  திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள வரதராஜபுரம் காவிரி ஆற்றில் மாட்டுப் பொங்கலுக்கு மறுதினம் நேற்று  நமது முன்னோர்களை வழிபட்டு ஊர் செழிக்கவும் விவசாயம் வளம் பெறவும் காவிரியில் விவசாயத்திற்கு தண்ணீர் வரவேண்டியும் நமது முன்னோர்களை வழிபட்டு வேண்டி விரும்பி கேட்டுக் கொள்ளும் பொருட்டு வரதராஜபுரம் காவிரி ஆற்றில் மூன்று சிறுமிகளுக்கு சாமி அழைத்து அம்மாயி தாத்தா மற்றும் மாரியம்மனை ஆகிய தெய்வங்களை அழைத்து அவர்களிடம் வாக்கு கேட்டு ஊர் விவசாயம் காவிரியில் விவசாயத்திற்கு தண்ணீர் வர வேண்டி பின்பு அம்மாயி சாமியை அழைத்து அம்மாயி சாமிக்கு அபிஷேக ஆராதனை நடத்தி பெண்கள் கும்மி அடித்தும் குலவை போட்டும் அம்மாயியை வழிபட்டு மகா தீபாராதனை நடைபெற்றது பின்பு முளைப்பாரி காவேரி ஆற்றில் விட்டும் பெண்கள் குடும்ப குடும்பமாக கலந்து கொண்டு தங்கள் வீட்டில் இருந்து கொண்டு வந்த பல்வேறு வகையான அன்னத்தை பரிமாறியும் உண்டு மகிழ்ந்தனர் இந்த நிகழ்ச்சியில் வரதராஜபுரம் அதனை சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் பெண்கள் குடும்பம்குடும்பமாக கலந்து கொண்டு சிறப்பித்தனர் இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை பேட்டரி கணேசன் முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் கணேசன் பாலகிருஷ்ணன் தங்கவேல் மற்றும் ஊர் பொதுமக்கள்  உபயதாரர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

  V.ராஜ்குமார்
  தொட்டியம்  தாலுக்கா
  செய்தியாளர்

Comments