தொட்டியத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள்விழா தொட்டியம் அதிமுக சார்பில் கொண்டாடப்பட்டது.






                    திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் தொட்டியம் ஒன்றியம் மற்றும் நகரம் அஇஅதிமுக சார்பாக  மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின்  106 வது பிறந்தநாள்விழா கொண்டாடபட்டது. தொட்டியம் பேரூர் கழக செயலாளர்   அ. திருஞானம் தலைமை வகித்து  விழாவில் அதிமுக கொடி ஏற்றிவைத்து இனிப்புகள்வழங்கினார் . சேர்மேன்   என். நெடுமாறன், ஒன்றிய செயலாளர்கள் பால்மணி, பிரகாசவேல்,   மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் என். துரைராஜ் , தலைமை கழக  பேச்சாளர் சோடா  கண்ணன் , மாவட்ட பிரதிநிதி செல்வராஜ் எம்ஜிஆர் இளைஞர் அணி துணைத் தலைவர் சுப்பிரமணி,  கூட்டுறவு வங்கி தலைவர்கள் குணா,  தோளூர்பட்டி எஸ்.கே.பி.ரத்தினம்,  கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் ராஜா ஒன்றிய இணைச் செயலாளர் சுபத்ரா சசிகுமார், ஒன்றிய கவுன்சிலர் புத்தூர் கோவிந்தராஜ்,  முன்னாள் தொட்டியம் பேரூராட்சி துணைத் தலைவர்  பேரூராட்சி கவுன்சிலர்  ஐயப்பன்,  தொட்டியம் பேரூராட்சி கவுன்சிலர்கள் ராஜேந்திரன், சோபநாதன் தனவந்தன்,    முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர்கள் ரமேஷ்,  திருஞானம், மதியழகன்,  கவியரசன், ,  கேபிள் சரவணன்,    மாணவரணி கார்த்திகைபட்டி சண்முகசுந்தரம், வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி,  பழக்கடை சுந்தர், கிளைச் செயலாளர் சந்திரமோகன், எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் கோட்டைமேடு ராஜேந்திரன், பிரபாகரன், வெங்காயபட்டி வரதன் மற்றும் ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர் . 
     
 இதேபோல் காட்டுபுத்தூர் பேருந்துநிலையம் முன்பு காட்டுப்புத்தூர் நகரச் செயலாளர் கே.ஆர். ராமச்சந்திரன் தலைமையில், மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் கேவிபி பழனிவேல்  அதிமுக கொடி ஏற்றிவைத்து இனிப்புகள்வழங்கினார் .அலங்கரிக்கப்பட்ட எம்ஜிஆரின்  திருவுருவ படத்திற்கு மாலை  அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர்.

 இதேபோல்  ஏலூர் பட்டியில் ஒன்றிய கவுன்சிலர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையிலும் அதிமுக கொடி ஏற்றிவைத்து இனிப்புகள்வழங்கினார் .  அலங்கரிக்கப்பட்ட எம்ஜிஆரின்  திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார். நிகழ்ச்சிகளில்  அதிமுக ஒன்றிய நகர கிளைக் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

  V.ராஜ்குமார்
  தொட்டியம்  தாலுக்கா
  செய்தியாளர்

Comments