தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய மாநாடு வருசநாட்டில் நடைபெற்றது
தேனி, ஜூலை. 2- தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலை மயிலை ஒன்றியம் வருசநாடு தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய மாநாடு ஒன்றிய தலைவர் தோழர் ராமசாமி தலைமையில் நடைபெற்றது. சிறப்புரை மாநில பொதுச்செயலாளர் சண்முகம் ஆற்றினார். வாழ்த்துரை மற்றும் விளக்க உரைகளை ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் வழங்கினார். இக்கூட்டத்தில் மேகமலை, வருசநாடு உள்ளிட்ட ஊராட்சிகளில் 96 கிராமங்களில் வாழும் வன விவசாயிகளை பாதுகாக்க தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் 2006-ம் ஆண்டு வன உரிமைச் சட்டப்படி மேல்முறையீடு செய்து பாதுகாக்க கோரியும். வருசநாடு வாலிபாறை அரசரடி சாலைகள் பழுதடைந்து இருப்பதை சரி செய்து உடனடியாக தார் சாலை அமைத்திட மயிலாடும்பாறை ,மல்லப்புரம் சாலையை போக்குவரத்து சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க கோரியும், கடமலைக்குண்டு ஆரம்ப சுகாதார நிலையத்தை அனைத்து வசதிகளும் கொண்ட அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டியும், வருசநாடு ஊராட்சியில் துணை மின் நிலையம் அமைத்து தடையில்லாமல் மின்சாரம் வழங்க கோரியும் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு 700க்கும் மேற்பட்ட வன விவசாயிகள் தும்மக்குண்டு, தண்டிய குளம், காமராஜபுரம், வாலிபாறை, வண்டியூர், அரசரடி, நொச்சி ஓடை, இந்திரா நகர், பொம்மராஜபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் கட்சி பாகுபாடின்றி அனைவரும் விவசாயிகள் என்ற அடிப்படையில் கலந்து கொண்டனர். பாதுகாப்பு பணியில் வருசநாடு காவல் துறையினர் ஈடுபட்டு இருந்தனர்.



Comments
Post a Comment