தருமபுரி. 01.07.22.  

தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர் தின நாள் கொண்டாடப்பட்டது.

தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர் தின நாள் மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் அமுதவள்ளி தலைமையில் கொண்டாடப்பட்டது. கொரோனா காலகட்டத்திலும் மற்ற நேரங்களிலும் சிறப்பாக பணியாற்றிய 190  டாக்டர்களுக்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் அவர்களால் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர் இளவரசன், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் சிவக்குமார், உள்ளிருப்பு மருத்துவர் டாக்டர் நாகவேந்தன்,  காது கேளாதோருக்கான அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் செந்தில்குமார் மற்றும் காந்தி, சரவணன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.

 

Comments