சித்த பாறை லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு மலேசியா சிவபக்தர் வழங்கிய திரிசூலம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
தேனி, ஜூலை. 2- தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே உள்ளகுமணன்தொழு சித்த பாறை லிங்கேஷ்வர் ஆலயத்தில் நேற்று 48 நாள் மண்டல பூஜை மற்றும் பஞ்சலோக ஐம்பொன் திரிசூலம் பிரதிஷ்டையை முன்னிட்டு 108 கங்கா,காவேரி மாகா தீர்த்த அபிசேக விழா நடைபெற்றது. இவ்விழாவில் முன்னிலை வகுத்த சிவ வீர சேகர் தேவாரம் சுவாமி அவர்கள்
சிறப்பு விருந்தினராக கலந்து விழாவை சிறப்பாக நடத்திய சேது ராமன், நகராஜ் (ஆலயம் தோன்ற முதல் முன்னோடி ஆவார்) ஆலய குருவாக வந்து மக்கள் நலனுக்காக அரும்பாடு பட்டு சிவாலயத்தை உருவகம் செய்யத சிவ சிவ ஸ்ரீ வெள்ளியங்கிரி சுவாமி விழாவிற்கு வருகை தந்த குரு மார்கள் அடியார் பெருமக்கள் அன்னதானம் அளித்து பொருளுதவி செய்த சிவ சேவ சமூக ஆர்வலர்கள் கடமலை, மயிலை, குமணன்தொழு திரிசூலம் உபயம் செய்த மலேசியா சிவ பக்தர்கள்,தீர்த்த குடம் எடுத்து வந்த அனைவருக்கும் மாலை உபயம் செய்தவர்கள், தட்டு அகல் விலக்கு உபயம் செய்தவர்கள், தண்ணீர் டேங்க் உபயம் செய்தவர்கள், பொன்னாடைக்கு ஏற்பாடு செய்த வர்கள்,பத்திரிக்கை நண்பர்கள் தீர்த்த குடம் எடுத்து வந்த அனைத்து பக்தர்களும்விழாவில் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்த அனைத்து அடியார் பெருமக்களுக்கும் குமணன்தொழு அ. ஜெயராம், லெட்சுமி தம்பதியினர். இவ்விழா சீரும் சிறப்புமாக நடைபெற உதவிய சிவ பக்தர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்தனர்.



Comments
Post a Comment