தருமபுரி . 01.07.22.

            தமிழ்நாடு காது கேளாதோர்  கூட்டமைப்பு சார்பில் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வெங்கடேசன் தலைமை தாங்கினார்.  இந்நிகழ்ச்சியில் காது  கேளாதோருக்கு 80 சதவீதம் மேல் விழுக்காடு  உள்ளவர்களுக்கு டி என் பி எஸ்சி குரூப் 4 தேர்வு இல்லாமல் வேலை வாய்ப்பு வரிசை அடிப்படையில் அரசுத்துறையில் 1 சதவீத வேலைவாய்ப்பு தர வேண்டும் மற்றும் தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு வழங்கப்படாத குறித்தும் காது கேளாதவருக்கு ஆவின் பாலகம் அமைத்து தருவது குறித்தும் வாரிசு அடிப்படையில் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் போன்ற ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் கைகளால் சைகை செய்து விசில் ஊதி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த காத்திருப்பு போராட்டத்திற்கு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும்  சுமார் 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர் ஆறுமுகம், செயலாளர் பழனிச்சாமி, துணை செயலாளர் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Comments