தருமபுரி . 01.07.22.
தர்மபுரி ஏஎஸ்டிசி காலனியில்
பூங்கா அமைப்பதற்கான பூமி பூஜை நகரமன்ற தலைவர் தலைமையில் நடந்தது.
தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட ஏ.எஸ்.டி.சி காலனியில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பசுமை பூங்கா அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று காலை நடந்தது. இப்பூஜைக்கு நகர மன்ற தலைவர் லட்சுமி, நகர மன்ற துணைத் தலைவர் நித்யா, ஆணையாளர் சித்ரா சுகுமார் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். இப்பூங்காவின் ஒப்பந்ததாரர் மாருதி பில்டர்ஸ் ரமணன் கூறுகையில், சுமார் 2146 சதுர அடியில் 75.25 லட்சம் மதிப்பீட்டில் அமைய உள்ள இப்பூங்கா குழந்தைகள் விளையாடவும் மற்றும் பெரியவர்கள் நடை பயிற்சி மேற்கொள்ளவும் வசதியாகவும், தர்மபுரி நகரத்திலேயே சிறந்த பூங்காவாகவும் அமைக்கப்பட உள்ளது என கூறினார்.
இந்நிகழ்வில் நகரப் பொறியாளர் ஜெயசீலன், இளநிலை பொறியாளர் (பொறுப்பு) தவமணி, நகரமைப்பு ஆய்வாளர் ஜெயவர்மன், நகரமன்ற உறுப்பினர் ஜெகன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Comments
Post a Comment