தொட்டியம் அருகே தோளூர்பட்டி ஊராட்சியில் ஊராட்சி சார்பில் மழைநீரை அகற்றுவதற்கான அதிரடி நடவடிக்கை

தொட்டியம், நவம்பர் -11 திருச்சி மாவட்டம்

          தொட்டியம் அருகே தோளூர்பட்டி ஊராட்சியில் ஊராட்சி சார்பில் மழைநீரை அகற்றுவதற்கான அதிரடி நடவடிக்கை

                  திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், தோளூர்பட்டி ஊராட்சி, 4வது வார்டு கணேசபுரம், பால்வாடி தெருவில், சாலை வசதி இல்லாததால், மழை நீர் வடிய வழி இன்றி சாலையில் தேங்கியும், சில வீடுகளினுள் புகுந்து மக்கள் மிகுந்த சிரமப்பட்டனர்.
இதனை அறிந்த தோளூர்பட்டி ஊராட்சி அவரச கால உடனடி நடவடிக்கையாக மோட்டார் கொண்டு தேங்கிய மழை நீரை கூடுமான வரையில் வடிய வைத்து, மக்களின் துயரை போக்கிய நிர்வாகத்திற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
மேலும் இதனை முன்கூட்டியே அறிந்த ஊராட்சி மன்றம், சாலை வசதி செய்து தர, அனைத்து ஏற்பாடுகளையும் செய்தது மிக்க மகிழ்ச்சி.
பெய்து வரும் மழையால் சாலையின் கட்டுமான பணிகளால் துவங்காமல் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  V.ராஜ்குமார்
  தொட்டியம்  
  செய்தியாளர்

Comments