திருத்தங்கல் மகாத்மாகாந்தி காலனியில் அடிப்படை வசதி இல்லாமல் தொற்று பரவும் அபாய நிலை- நகராட்சி அதிகாரிகளை அழைத்து அவலத்தின் அடையாளம் காட்டும் திமுக பிரமுகர்
திருத்தங்கல் நவம்பர் 12
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் நகர் 3வது வார்டு மகாத்மா காந்தி காலணியில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக அந்தப் பகுதிகளில் மழைநீர் வடிகால், சாக்கடை வடிகால், சாலை வசதி, தெரு விளக்கு, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதி எதுவும் இல்லாமல், அவதியுறும் நிலையில் வாழும் மக்களை காண முடிகிறது. கொரோனா தொற்று பரவல் காலத்திலும்கூட, சுகாதாரம் என்றால் என்னவென்றே தெரியாமல்,
அசுத்தங்களுக்கு மத்தியில் வாழ்க்கையை ஓட்டி வந்தனர். இந்த அவல நிலையை போக்க, திருத்தங்கல் நகர திமுக பொறுப்பாளர் எஸ். ஏ. உதயசூரியன்,
மாநகராட்சி ஆணையாளர் (பொறுப்பு ) லலிதா மணி, திருத்தங்கல் துணை ஆணையாளர் ரவிச்சந்திரன், மாநகராட்சி பொறியாளர் ரமேஷ் ஆகியோர்களை, அந்தப் பகுதிகளுக்கு அழைத்துச்சென்று, பார்வையிட செய்தார். அதன் விளைவாக, பகுதியில் உடனே சர்வே செய்யப்பட்டு, பிரதான மழைநீர் வடிகால் அமைப்பதற்கு, திட்ட மதிப்பீடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள், மகிழ்ச்சியோடு திமுக பிரமுகருக்கு நன்றி தெரிவித்தனர்.
செய்தியாளர் கணேசமூர்த்தி
Comments
Post a Comment