விருதுநகர் நவம்பர் 12
விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில், தனி வட்டாட்சியர் பொன்ராஜ் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக சட்டமன்றத் தேர்தல் வெற்றிகரமாக நடத்திய பின்பு, சட்டமன்ற தேர்தல் செலவினங்களையும், வருவாய் துறையினருக்கு வழங்க வேண்டிய மதிப்பு ஊதியத்தையும் கால தாமதம் செய்யாமல் உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மையமாக வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் கணேசமூர்த்தி
Comments
Post a Comment