தொட்டியம் அருகே தலைமலையில் ஆர்ப்பரிக்கும் அருவி

தொட்டியம், நவம்பர் -11 திருச்சி மாவட்டம்

            தொட்டியம் அருகே தலைமலையில் ஆர்ப்பரிக்கும் அருவி
                திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் தொட்டியம் அருகே தலைமலையில் தற்போது பெய்து வரும் பருவ மழையால்  தண்ணீர் ஆர்ப்பரித்து அருவியாக கொட்டுகிறது.  தற்பொழுது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து மழை பெய்து வருகிறது.  தொட்டியம் பகுதியில் பருவமழை பெய்து வருகிறது. தொட்டியம் அருகே உள்ள தலைமலை பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மலையிலிருந்து  நீர் ஆர்ப்பரித்து அருவியாக கொட்டி வருகிறது. இதையடுத்து அருகில் உள்ள பொதுமக்கள் ஆர்ப்பரித்து வரும் அருவியில் குளித்தும் கண்டு ரசித்தும் வருகின்றனர் தற்பொழுது தலைமலையிலிருந்து வரும் தண்ணீரால் உடையார்குளம் புதூர் முதலிப்பட்டி சஞ்சீவிபுரம் மின்னத்தம் பட்டி சிவந்திபட்டி காமலாபுரம் புதூர் பகுதியில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இதையடுத்து 2 போகம் நெல் சாகுபடி செய்ய முடியும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு இப்பகுதியில் தலைமலையிலிருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து வருவதால் கண்டிப்பாக இரு போகம் நெல் சாகுபடி செய்ய முடியும் என விவசாயிகள் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் தெரிவித்தனர். தற்போது கீரி கல்மேடு சஞ்சீவி புரம் மின்னத்தம்பட்டி சிந்தம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு தலைமலையிலிருந்து தண்ணீர் ஓடையில் வருவதால் விவசாயம் செழிக்கும் என விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

  V.ராஜ்குமார்
  தொட்டியம்  
  செய்தியாளர்

Comments