தொட்டியம் திரிபுரசுந்தரி உடனுறை அனலாடீஸ்வரர் திருக்கோவிலில்

தொட்டியம், நவம்பர் -11 திருச்சி மாவட்டம்

              தொட்டியம் திரிபுரசுந்தரி உடனுறை அனலாடீஸ்வரர் திருக்கோவிலில் சுப்பிரமணியசுவாமி மற்றும் வள்ளி தெய்வானை திருக்கல்யாண உற்சவம் 

                திருச்சிமாவட்டம் தொட்டியம் திரிபுரசுந்தரி உடனுறை அனலாடீஸ்வரர் திருக்கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 4-ஆம் தேதி தொடங்கியது. கந்தசஷ்டி விழா நிறைவு நாளான இன்று  கோவில் வளாகத்தில் உள்ள சுப்பிரமணியசுவாமி மற்றும் வள்ளி தெய்வானை உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று சந்தன காப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் கோவிலில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இந்த விழாவில் தொட்டியம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

  V.ராஜ்குமார்
  தொட்டியம்  
  செய்தியாளர்

Comments