தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில், வடகிழக்கு பருவமழை-2021 முன்னெச்சரிக்கை

நவம்பர் 12. 
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில்,  வடகிழக்கு பருவமழை-2021 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து  துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் அரசு முதன்மை செயலாளர் / தொழிலாளர் நல ஆணையர் மற்றும் தருமபுரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனைவர். அதுல் ஆனந்த், அவர்கள்
தலைமையில் தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர்  திவ்யதர்சினி அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் , அரசு முதன்மை செயலாளர் / தொழிலாளர் நல ஆணையர் மற்றும் தருமபுரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனைவர். அதுல் ஆனந்த், அவர்கள் பேசும் போது 

தருமபுரி மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் பாதிப்புக்குள்ளாக இடங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நிவாரணப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.வடகிழக்கு பருவமழை காலத்தில் பொதுமக்களுக்கு எவ்விதமான சிரமுமின்றி, அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அனைத்து நியாய விலைக்கடைகளிலும் அத்தியாவசியப் பெருட்களின் இருப்பு போதுமான அளவு வைத்திட ஏற்பாடு செய்திட வேண்டும்.

மேலும், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான அளவு மருந்துகள் இருப்பு வைக்கப்பட வேண்டும்.அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து வடகிழக்கு பருவமழை காலத்தில் பணியாற்றிட வேண்டும் என அரசு முதன்மை செயலாளர் / தொழிலாளர் நல ஆணையர் மற்றும் தருமபுரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனைவர். அதுல் ஆனந்த் அவர்கள் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது   அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து தொழிலாளர் நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு அரசு முதன்மை செயலாளர் / தொழிலாளர் நல ஆணையர் மற்றும் தருமபுரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனைவர். அதுல் ஆனந்த், அவர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Comments