நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில்

 

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில் தன்னை இரட்டை  இலைசின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டு வருகிறார் முன்னாள் அமைச்சர். பி. தங்கமணி அவர்கள்.   நேற்று பள்ளிபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 15. 16. 18. 20.   வார்டு பகுதிகளில் திறந்த வேனில் சென்று தன்னைப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்த மக்களுக்கு வீடு வீடாக சென்று நன்றியை தெரிவித்தார்.  எப்போதும் உங்களுக்காக பணியாற்றுவேன் உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி அளித்தார். பள்ளிபாளையம்  நகர கழக செயலாளர் பிஎஸ் வெள்ளிங்கிரி.    அம்மா பேரவை செயலாளர் டி கே எஸ் சுப்பிரமணி.  நகரத் துணைச் செயலாளர் ஜெய்கணேஷ்.  கூட்டுறவு தலைவர்.  திருமூர்த்தி.  கட்சி நிர்வாகிகள்  பலர் கலந்து கொண்டனர்.



 செய்தியாளர் 
ராஜமாணிக்கம்

Comments