தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவ கல்லூரியில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை

 


தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள

 11 அரசு மருத்துவ கல்லூரியில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடத்தப்பட ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்பட இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்,


திருவள்ளூரில் உள்ள புட்லுர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திருவள்ளூர் பகுதியில் PST நிறுவனம் கட்டப்பட்டு வரும் மருத்துவ கல்லூரியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திடீர் ஆய்வு மேற்கொண்டார், 

கட்டுமானப் பணிகள் தொடர்பாகவும் அவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்,
அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

தமிழகத்தில் புதியதாக  11 இடங்களில் மருத்துவக் கல்லூரி பணி நடந்து வருவதாகவும் அந்த  பணிகள் முடியும் தருவாய் இருந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்,
கடந்த 1 மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் கட்டப்பட்டு வரும் 11 மருத்துவக் கல்லூரியின் கட்டுமான பணிகள் குறித்து  ஒன்றிய சுகாதாரக் குழு ஆய்வு செய்ததில்,

விருதுநகர் ,கள்ளக்குறிச்சி, நீலகிரி ஆகிய மூன்று மாவட்டங்களில் கட்டப்பட்டு வருகின்ற  கல்லூரி மருத்துவமனைக்கு  தலா
150 வீதம் மாணவர் சேர்க்கைக்கு 

ஒன்றிய அரசு அனுமதி அளித்திருப்பதாகவும்
அதேபோல் நாமக்கல், திருப்பத்தூர்,ராமநாதபுரம், திருவள்ளுர் ஆகிய நான்கு மாவட்டங்களில் நடைபெற்று வரும் மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகளில் சிறிய அளவில் குளறுபடி இருந்ததால்  150 பதிலாக 100 மாணவர் சேர்க்கைக்கு  ஒப்புதல் அளித்திருப்பதாகவும்

திண்டுக்கல் கிருஷ்ணகிரி 
நாகப்பட்டனம் அரியலூர் ஆகிய 4 மாவட்டங்களில் கூடுதல் கட்டுமானப் பணிகள் நிறைவு செய்ய வேண்டுமென மாணவர் சேர்க்கை நடத்த ஒப்புதல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததாலும்,

அந்த பணிகள் எல்லாம் தற்போது நிறைவடைந்து இருப்பதாலும்
குறைபாடு உள்ள கல்லூரிகள் மருத்துவ சேர்க்கை குறைவாக அளித்திருப்பது தொடர்பாக தற்போது முழுமையாக குறைபாடுகளை சரிசெய்து இருப்பதால்

இது தொடர்பாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் சந்திக்க சுகாதாரத்துறை செயலாளர் உடன்  நாளை டெல்லி செல்ல இருப்பதாகவும்,
அப்போது குறைபாடுகள் நிவர்த்தி செய்யப் பட்ட நாமக்கல் , திருப்பூர் ராமநாதபுரம்  ,திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மருத்துவ கல்லூரிக்கு

ஏற்கனவே 100 மாணவர் சேர்க்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பதால்,
குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு இருப்பதால் மேலும்  தல 50 மாணவர் சேர்க்கை  நடத்த அனுமதி கோர உள்ளதாகவும் அவர் கூறினார்,

திண்டுக்கல் ,கிருஷ்ணகிரி ,அரியலூர், நாகப்பட்டினம் 150 விதம் ஆக மொத்தம் 800 மாணவர் சேர்க்கை இந்த ஆண்டிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வலியுறுத்தப்பட இருப்பதாகவும் அவர் கூறினார்,
புட்லுர் பகுதியில் உள்ள துணை சுகாதார நிலையம் கடந்த ஐந்து ஆண்டுகளாக துணை சுகாதார நிலையம் இயங்காமல் முட் செடிகள் படர்ந்து இருந்ததால்,பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கொடுத்த கடிதத்தின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும்,

அங்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு திட்ட மதிப்பீடு தயார் செய்ய சொல்லப்பட்டு இருப்பதாகவும், அதனால் புட்லூர் பகுதியில்
புதிதாக துணை சுகாதார நிலையம் அமைத்து தரப்படும் என்றார்,

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால்
மாணவர்களுக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும்,

கொரோனா  விதி முறைகளை கடைபிடித்து மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்றும்
அவர் அறிவித்துள்ளார், 

தீபாவளி பண்டிகையில் அதிக கூட்டம் கூடும் இடங்கள் மக்கள் பாதுகாப்புடன் சென்று வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்
பல்வேறு மருத்துவ கல்லூரிகளில் 

கட்டுமான பணிகள் தொடர்பாக சோதனை நடைபெற்று வருவதாகவும்  தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டால் அது யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்,
வடகிழக்கு பருவமழை தொடங்கி இருப்பதால் டெங்கு காய்ச்சலை ஒழிக்க சுகாதாரத்துறை  உள்ளாட்சித் துறை சார்பில்  பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும்,

அவர் கூறினார்,
தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களான

ஜிகா நிபா நிகா போன்ற வைரஸ் நோய்கள் உருவாகி வருவதால் தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் தொடர் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்,
தமிழகம் முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில்

69 சதவீதம் முதல்கட்ட தடுப்பூசியும் 
29 சதவீதம் இரண்டாம் கட்ட தடுப்பூசியும் போடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்,

வருகின்ற சனிக்கிழமை தமிழகம் முழுவதும்
 7 வது கட்ட மெகா  தடுப்பூசி பமுகாம் நடத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்,

இந்த ஆய்வில் பால்வளத்துறை அமைச்சர் சாமு.நாசர், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் விஜி ராஜேந்திரன் கிருஷ்ணசாமி மாவட்ட ஆட்சியர் உடன் இருந்தனர்,




Comments