திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வில்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பேத்துப்பாறை பகுதியில் நீண்ட நாட்களாக ஒரு சாலை வெளிநாட்டு பெண்மணியின் பிடியில் இருந்து வந்தது அந்த சாலை வழியாக அங்கு விவசாயம் செய்யும் மக்கள் பள்ளி குழந்தைகள் செல்ல முடியாமல் பல போராட்டங்களை நடத்தி வந்தார்கள் தங்களது விளைபொருட்களை தலைச்சுமையாக எடுத்து சென்று வந்தார்கள் பேத்துப்பாறை கிராமப்பகுதி விவசாய மக்கள் மற்றும் பொதுமக்கள் செல்ல முடியாத சாலையை பலமுறை அரசின் கவனத்திற்கு பாரதிய கிசான் சங்கம் நிர்வாகி தி அசோகன் அவர்கள் தலைமையில் எடுத்துச் சென்றார்கள் அதன் விளைவாக தற்போது உள்ள கோட்டாட்சியர் தலைமையில் VAO சுசிந்திரன் அவர்கள் அந்த வெளிநாட்டு பெண்மணியிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு ஏற்படுத்தி கொடுத்த மறுகணம் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அந்த சாலையை தங்களுடைய சொந்த உழைப்பில் சீரமைத்து போக்குவரத்திற்கு கொண்டு வந்துள்ளார்கள் இந்த மகிழ்ச்சியில்
எங்கள் பேத்து பாறை வயல் பகுதி விவசாயிகளின் கோரிக்கையை பரிசிலனை செய்து பாதையை திறந்து எங்கள் பகுதி விவசாயத்தையும் பள்ளி குழந்தைகளின் நலனையும் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்தமைக்கு எங்கள் பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோட்டாட்சியர் மற்றும் VAO சுசிந்திரன் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்கள்.
Comments
Post a Comment