திருவள்ளூர் அருகே நெடுஞ்சாலை துறை சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு

 

திருவள்ளுர்-

திருவள்ளூர் அருகே நெடுஞ்சாலை துறை சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததை அகற்ற சென்ற அதிகாரிகளை ஆக்கிரமிப்பாளர்கள் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில்  ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது ,

        திருவள்ளூர் அடுத்த ஈக்காடு கண்டிகை பகுதியில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து தகர தடுப்புகள் கொண்டு அடிக்கப்பட்டு வந்ததை தகவல் அறிந்து அங்கு வந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடம் இங்கே தகர தடுப்பு அடிக்கக் கூடாது என தட்டிக் கேட்டபோது எதிர் தரப்பினர் அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தும் தள்ளுமுள்ளு ஏற்பட்டும் அங்கு  கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், இதனால் அப்பகுதியை சேர்ந்தவர்கள்  நெடுஞ்சாலை  ஓரத்தில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றுங்கள் நாங்கள் இந்த ஆக்கிரமிப்பை அகற்றுவோம் என்று  அவர்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது,

Comments