அக்டோபர் 28. பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பொது வழிப்பாதையை ஆக்கிரமிப்பு செய்துள்ள நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் கோரிக்கை.
தருமபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள அச்சல்வாடி அடுத்த ஒடசல்பட்டி கிராம காட்டுக்கொட்டாய் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் விவசாயம் மட்டுமே நம்பியுள்ள நிலையில் ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தி வந்த பொது வழிப்பாதையை அதே பகுதியைச் சேர்ந்த கோபால் மகன் முருகன் என்பவர் அவருடைய சகோதரர் வேங்கன் உதவியோடு 12 அடி அகலம் கொண்ட பொது வழிப்பாதை தன்னுடைய பட்டா நிலத்தில் உள்ளதாக தெரிவித்து ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இந்த 12 அடி அகலம் கொண்ட பொது வழி பாதையில் மக்கள் யாரும் சென்று வரக்கூடாது என்ற நோக்கத்தில் பாதையில் ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளத்தை தோண்டி சுமார் 2 அடி அகலம் அளவில் மக்கள் நடந்து செல்வதற்கு மட்டும் இடைவெளி விட்டுள்ளார். இந்த இரண்டு அடி அளவில் அவசர காலங்களில் இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது பள்ளத்தில் விழும் சூழ்நிலை உள்ளது. அப்பகுதி மக்களின் நலன் கருதி தமிழ்செல்வன் என்பவர் பொது வழிப்பாதையில் தோன்டப்பட்ட பள்ளத்தை மக்களின் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றி மீண்டும் மக்கள் பயண்படுத்தும் வகையில் சீர்செய்தார். பணம் பலத்தை கொண்டு மக்களை அச்சுறுத்தி வரும் முருகன் இந்த வழிப்பாதையை கடந்த 1991-ம் ஆண்டில் முறைகேடாக பத்திரப்பதிவு மற்றும் பட்டா மாறுதல் செய்து உள்ளார். அதனை அடுத்து பலமுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை இல்லை என தெரிவித்தனர். எனவே முறைகேடாக பத்திரப் பதிவும் மற்றும் பட்டா மாறுதல் செய்ததை ரத்து செய்து தாங்கள் தொடர்ந்த பொது வழிப்பாதையை மீட்டு தந்து தார் சாலை அமைத்து தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments
Post a Comment