அக்டோபர் 28. அரசு மருத்துவமனை முன்பு தீ விபத்தில்லாத தீபாவளியை கொண்டாட பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
தீயணைப்பு துறை மற்றும் மீட்புப் பணித் துறை சார்பில் தீ விபத்தில்லாத தீபாவளியை கொண்டாட பொதுமக்களுக்கு வேண்டுகோள் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட அலுவலர் கொ.செந்தில்குமார் அவர்களின் உத்தரவு படியும் நிலைய அலுவலர் கொ.ராஜா அவர்கள் தலைமை தாங்கினார் மேலும் பெரியவர்களின் மேற்பார்வையில் பட்டாசை எடுத்து மகிழுங்கள் குடிசைகள் இல்லாத திறந்தவெளியில் பட்டாசு வகைகள் மத்தாப்பு கொளுத்தும் போது இறுக்கமான ஆடை அணியுங்கள் பட்டாசு கொளுத்தும் போது ஒரு வாலி நீர் பக்கத்தில் பாதுகாப்பிற்கு இருக்கட்டும் தரையில் வைத்து பக்கவாட்டில் நின்று கொளுத்துங்கள் போன்ற பல்வேறு விழிப்புணர்வு வாசகங்களை அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது மற்றும் விபத்தில்லாத தீபாவளிக்கு வாழ்த்துக்கள் கூறப்பட்டது.
Comments
Post a Comment