அக்டோபர் 28. தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் காலியிடங்களுக்கு, வரும் 29-ம் தேதி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடக்க உள்ளது.

 



 கல்லூரி முதல்வர் முனைவர் கிள்ளிவளவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெரியார் பல்கலைக் கழக மாணவர் சேர்க்கை இறுதி நாள், வரும் 29-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் காலியாக உள்ள மற்றும் மாற்றுச் சான்றிதழ் பெறப்பட்ட சில சேர்க்கை இடங்களுக்கு அன்று காலை 10.30 மணியளவில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடக்க உள்ளது. கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் நடக்கும் இக்கலந்தாய்வில் மாணவ, மாணவியர் பங்கேற்று பயனடையலாம். காலியிடங்கள் தொடர்பான விவரங்கள் கல்லூரி இணையதளமான www.gacdpi.in என்ற முகவரியிலும், கல்லூரி வளாகத்தில் உள்ள அறிவிப்புப் பலகையிலும் வெளியிடப்பட்டுள்ளது.

Comments