சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் 220 வது நினைவு நாளில் சிலம்பம் ஆடி வீரவணக்கம்

 


சாத்தூர் அக்டோபர் 28

சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.எஸ். அய்யப்பன் தலைமையில், அண்ணாநகரில்  மாமன்னர்கள்  மருதுபாண்டியர்களின் 220 வது நினைவு நாளை அனுஷ்டிக்கும் வகையில் மருது பாண்டியர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது. விருதுநகர்  மாவட்ட  காங்கிரஸ் கமிட்டி  பொதுச்செயலாளர் ஜோதி நிவாஸ் மாமன்னர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி, ஏழை எளியவர்களுக்கு இலவச அரிசி பைகளை வழங்கினார்.  தமிழ்நாட்டின் பாரம்பரிய வீர விளையாட்டான சிலம்பாட்டத்தை சிறுவர்கள் நிகழ்த்தினர். சிலம்பம் ஆடிய சிலம்பாட்ட சிறுவர்களுக்கு மருதுபாண்டியர்களின் நினைவாக பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் செயலாளர் சந்திரன், சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் கும்கி கார்த்திக், கிழக்கு வட்டார தலைவர் சுப்பையா, லட்டு கருப்பசாமி, மேற்கு வட்டார துணைத்தலைவர் ஒத்தையால் முத்துவேல், சத்திரப்பட்டி லக்ஷ்மணன், நகர துணைத்தலைவர் சின்னப்பன், இளைஞரணி தலைவர் சதாம் உசேன் ஆகியோர் கலந்துகொண்டு மாமன்னர்கள் மருது பாண்டியர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

செய்தியாளர் கணேசமூர்த்தி

Comments