பெரியகுளம் அருகே 1700 மது பாட்டில்களுடன் ஒருவர் கைது,ஒரு தலைமறைவு தனிப்படை அமைத்து காவல் துறையினர் தேடி வருகின்றனர்

 
 


 தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள  டி.கள்ளிப்பட்டி  பகுதியை சேர்ந்த கருப்பு மகன் பாஸ்கரன் மற்றும் அவரது நண்பர் ரமேஷ்  ஆகிய இருவருக்கும் குடிப்பழக்கம் மற்றும் போதை வஸ்துகள் பயன்படுத்தும் மற்றும் விற்பனை செய்யும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் வருமானத்திற்காக இவர்கள் இருவரும் அரசு மதுபான கடைகளில் இருந்து அளவுக்கு அதிகமான மதுபானங்களை கடை விற்பனையாளர் மற்றும் கண்காணிப்பாளர் உதவியுடன் வாங்கி வந்து கள்ளச் சந்தையில் விற்று ஆதாயம் பார்த்து வந்துள்ளனர் . இந்நிலையில் வருகின்ற தீபாவளி பண்டிகை மற்றும் பசும்பொன் தேவர் நினைவு தினம் உள்ளிட்ட விடுமுறை நாட்களில் விற்பதற்காக 1700 மது பாட்டில்களை வாங்கி வந்து டி.கள்ளிப்பட்டி பகுதியில் உள்ள பாஸ்கரன் என்பவருக்கு சொந்தமான பழைய தீப்பெட்டி குடோனில் பதுக்கி விற்பனைக்காக வைத்திருந்ததாக தகவல் அறிந்து  பெரியகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் அறிவுறுத்தலின் படி  பெரியகுளம் தென்கரை காவல் ஆய்வாளர் ஜெயசந்திரன், சுகுமாறன் ,சார்பு ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் போலீசார் விரைந்து சென்று  சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 1700 குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.மேலும் பெரியகுளம் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சட்ட விரோதமாக மது, கஞ்சா விற்பனை செய்யும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் விரும்புகின்றனர். மேலும் அதிகளவிலான  மது பாட்டில்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்த  பெரியகுளம் உட்கோட்ட காவல் துறையினரை பொதுமக்கள்,சமூக ஆர்வலர்கள்  பாராட்டுக்களை தெரிவித்தனர்.

Comments