அக்டோபர் 17. கள்ளக்காதல் விகாரத்தில் தங்க நகைகளுக்காக மூன்று குழந்தகளின் தாய் கொலை கூலி தொழிலாளி கைது

அக்டோபர் 17. கள்ளக்காதல் விகாரத்தில் தங்க நகைகளுக்காக மூன்று குழந்தகளின் தாய் கொலை கூலி தொழிலாளி கைது

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகேவுள்ள நார்த்தம்பட்டி கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி ரவி என்பவரின் மனைவி தேன்மொழி(34) இவர் அதியமான்கோட்டை அருகே உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார்.பாகல்பட்டி கிராமத்தை சேர்ந்த கூலித்தொழி அசோகன்(30) இவர் அதே தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார்.

இவர்கள் இருவரும் தனியார் கம்பெனி ஒன்றில் பணி செய்தபோது பழக்கம் ஏற்பட்டு இருவருக்குள்ளும் தகாத உறவு ஏற்பட்டுள்ளது, கடந்த மாதம் 24 ம்தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற தேன்மொழி, 26ம் தேதி ஐயப்பன் கரடு என்ற இடத்தில் சடலமாக மீட்கப்பட்டார், அவர் அணிந்திருந்த தங்க நகைகள் மாயமாயிருந்தது, இது தொடர்பான விசாரணையில் , தேன்மொழியை திட்டமிட்டு கொலை செய்தது அசோகன் தான் என தெரியவந்தது.இதனை தொடர்ந்து அசோகனை கைது செய்து தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இதில் பாேலீசார் நடத்திய விசாரணையில் கொலையாளி அசோகனுக்கு திருமாணமாகததும், தனியார் கம்பெனியில் வேலை பார்த்த நேரம் போக சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததும், அதகிளவு கடன் பிரச்சனையில் சிக்கி தவித்து வந்த நிலையி்ல் ஏற்கனவே திருமணாகி மூன்று குழந்தைகள் உள்ள தேன்மொழியை, அவர் அணிந்திருந்த தங்க நகைகளை அபகறிக்க திட்டமிட்டு திருணம் செய்துகொள்வதாக கூறி அழைத்துச்சென்று தூக்க மாத்திரை கலந்த குளிர்பானத்தை கொடுத்து தேன்மொழி மயங்கியதும், நகைககளை பறித்துக்கொண்டு சேலையால் கழுத்தை நெறித்து கொலை செய்ததும் தெரியவந்தது.
அசோகனை கைது செய்த போலிசார் அவரிடம் இருந்து தேன்மொழியிடம்  இருந்து திருடப்பட்ட 6பவுன் தங்க நகைகள்  வெள்ளி கொலுசுகள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

Comments