கடந்த 10 ஆண்டு காலமாக சுற்றுச்சூழலை பாதுகாக்க அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,
தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதிலிருந்து மக்கள் மனந்திரும்ப வேண்டும் - சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் பேட்டி
திருவள்ளூர் அடுத்த திருவூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன வளாகத்தில் பறம்பு தமிழ்ச்சங்கம் சார்பில் பனைவிதை நடுதல், மூலிகைப் பண்ணை அமைத்தல், நூல் வெளியீடு நிகழ்ச்சி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் மாநில துணைத் தலைவர் நந்தலாலா தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நூலை வெளியிட்டார்,
மேலும் பனைவிதை மற்றும் மரக்கன்றுகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார், பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி ஆகியோர் நட்டு வைத்தனர்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன், தமிழக அரசின் சார்பில் சுற்றுச்சூழலை மீட்டெடுக்கும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது அதன் அடிப்படையில் சதுப்பு நிலங்களை பாதுகாக்கும் இயக்கம் தமிழக முதல்வரால் தொடங்கப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் 1076 கிலோ மீட்டர் நீளம் உள்ள சதுப்பு நிலங்களை பாதுகாக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும், வரும் காலங்களில் பொதுமக்கள் பட்டாசு வெடிப்பதிலிருந்து மனம் திரும்பவேண்டும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக பட்டாசு வெடிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்பது தமிழகத்தில் நிலைப்பாடாக உள்ளது, மேலும் 10 ஆண்டுகளாக தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுகளை சரியாக சுத்திகரிக்க வேண்டும் என்பதை தமிழக அரசு கவனிக்க மறந்து விட்டது, பிரச்சனையை தீர்க்க தமிழக அரசு எந்த நடவடிக்கை எடுக்க விடவில்லை, தற்போது மு க ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் எந்தெந்த தொழிற்சாலைகளில் அபாயகரமான ரசாயன கலவை வெளிவருகின்றது என்பதை கண்டறிந்து அவற்றை சுத்திகரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறு சுத்திகரிப்பை மேற்கொள்ளாத தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்
இந்நிகழ்ச்சியில் பறம்பு தமிழ் சங்க தலைவர் திருப்பதிவாசகன், ஊராட்சி மன்ற தலைவர் பழனி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன கூடுதல் இயக்குனர் செல்வராஜன், பிறம்பு தமிழ்ச் சங்கச் செயலாளர் அங்கையற்கண்ணி, திமுக ஒன்றிய செயலாளர் ஜெயசீலன், ஒன்றிய கவுன்சிலர்கள் எத்திராஜ், திலிப்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் ம பாரத்
Comments
Post a Comment