சிவகாசி மக்களின் நீர் ஆதாரமான வெம்பக்கோட்டை

சிவகாசி மக்களின் நீர் ஆதாரமான வெம்பக்கோட்டை அணை நீரை பதுக்கும் தனியார் பேப்பர் மில் நிறுவனம்- மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? நாம் தமிழர் கட்சி புகார் 

 சிவகாசி ஆகஸ்ட் 12

சிவகாசி அருகில் உள்ள வெம்பக்கோட்டை அணையானது, சிவகாசி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் பல்லாயிரம் ஏக்கர் நில பாசன வசதிக்காகவும் பயன்பட்டுவந்தது. வைப்பாறு என்ற ஆறு ஓடி, அணைக்கு வருவதால் வெம்பக்கோட்டை அணையின் நீர்மட்டம் உயரும். ஆனால் கடந்த 15 ஆண்டு காலத்திற்கு மேலாக இந்த ஆணை நிறைந்த பாடில்லை. அணையின் அருகே உள்ள ஒரு தனியார் பேப்பர் மில் நிறுவனம், ஆற்றுப்படுகையில் அணைக்கு வரும் தண்ணீரை தனது சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் விதமாக மிகப்பெரிய கிடங்கு அமைத்து, சட்டத்திற்குப் புறம்பாக தண்ணீர் வளத்தை பதுக்கி வருவதாகவும், அணைக்கு வரும் மழைநீரை நாலாபக்கமும் செல்ல விடாமல் தனது ராட்சச கிடங்களுக்குச் செல்லுமாறு வடிவமைத்துள்ளனர். பொதுமக்களுக்கு பயன்படும் தண்ணீரை, ஒரு தனியார் நிறுவனம்   பதுக்கி, கள்ளத்தனமாக பயன்படுத்துவதை உடனடியாக மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் விருதுநகர் மண்டல செயலாளர் ஜெயராஜ், தெற்கு மாவட்ட செயலாளர் பாபு, சாத்தூர் தொகுதி செயலாளர் பாண்டி, தொகுதியின் தலைவர் மகேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் வெம்பக்கோட்டை அணைக்கட்டு பகுதியில்,எந்தெந்த வகையில் தண்ணீர் திருடப்பட்டு வருகிறது என்பதற்கான ஆதாரங்களை திரட்டி வருகிறோம் என்றும், விரைவில் தெற்கு மாவட்டத்தின் சார்பாக மிகப்பெரிய போராட்டம் நடத்தப் போவதாகவும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்  அறிவித்துள்ளார்கள்.
அரசு உடனடி  நடவடிக்கை எடுக்குமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு.

செய்தியாளர் கணேசமூர்த்தி

Comments