தர்மபுரி அருகே தங்களின் கிராமத்தில் மரக்கன்றுகளை நடவு செய்து




தர்மபுரி அருகே தங்களின் கிராமத்தில் மரக்கன்றுகளை நடவு செய்து, பராமரிப்பின்றி இருந்த கிணற்றை தூர்வாரி, அதன் நீர் மூலமாக மரங்களை பராமரித்து வருகின்றனர்.தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தாலுகா  பாடி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்த சாமி. இவர் பீனிக்ஸ் என்ற அமைப்பை உருவாக்கி பள்ளி மாணவ, மாணவிகள் உதவியுடன் 2500 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடவு செய்துள்ளார்.இவர் நமது நிருபரிடம் கூறியதாவது: 
மாணவ, மாணவிகள் உதவியுடன் இதுவரை 2500 க்கும் மேற்பட்ட ஆலன், அத்தி, அரசன், நாவல், தான்றி, பூவரசன், புங்கன். இயல்வாகை. மயில் கொன்றை, பனை உள்ளிட்ட பல்வேறு வகையிலான மரங்களை நடவு செய்துள்ளோம். அது மட்டுமின்றி  கிணற்றை சுற்றிபல்வேறுவகையிலான ஓவியங்களை வரைந்துள் ளோம். சிறுவர், சிறுமிகள் இந்த ஓவியங்கள் மூலமாக மரங்களின் பயன்பாடுகளை எளிதில் தெரிந்து கொள்ள இது போன்ற ஓவியங்களை வரைந்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Comments