தருமபுரி மாவட்டம்
மொரப்பூர் ரயில் பாதையில் அடையாளம் தெரியாமல் ஆண் சடலம். சடலத்தை கைப்பற்றி ரயில்வே காவல்துறையினர் விசாரணை.
தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் ரயில் நிலையத்தில் இருந்து சேலம் ரயில் நிலையத்திற்கு செல்லும் ரயில் தண்டவாள இரும்பு பாதையில் நேற்று இரவு அடையாளம் தெரியாத ஆண் சடலம் இருப்பது தெரிய வந்தது. இந்த சம்பவம் 9 மணிக்கு சென்ற ரயிலில் அடிப்பட்டு இறந்திருக்கலாம் என்றும் தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சேலம் ரயில்வே காவல் துறையினருக்கு 2.30 மணிக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே காவல்துறையினர் சோதனை செய்ததை அடுத்து மொரப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். சடலத்தை கைப்பற்றி இறந்த நபரிடம் சோதனை செய்ததில் முகவரி குறித்து அடையாளம் எதவும் கிடைக்க பெறவில்லை. சேலம் ரயில்வே காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு சடலத்தை அனுப்பி வைத்தனர். இறந்துபோன நபரின் முகவரி குறித்தும், கொலையா தற்கொலையா என விசானை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
Post a Comment