பெரியகுளம் நூலக தந்தை எஸ்.ஆர்.அரங்கநாதன் பிறந்த நாள் விழா நினைவு பரிசு மற்றும் பாராட்டு விழா





தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை நூலகத்தில் நூலக தந்தை எஸ்.ஆர்.அரங்கநாதன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பெரியகுளம் தாலுகா ஊதிய மைய நூலகர்கள், மற்றும் வாசகர் வட்ட பொறுப்பாளர்களுக்கு பாராட்டு விழா மற்றும் நினைவு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மு.அன்புக்கரசன் நூலக ஆர்வலர், தலைவர் தென்கரை வாசகர் வட்டம்  தலைமையில் நடைபெற்றது. ஆ. சவடமுத்து நல்நூலகர் தென்கரை நூலகர், வரவேற்புரையாற்றினார். மனிதநேய டாக்டர். செல்வராஜ் நூலக ஆர்வலர், தலைவர் வடுகபட்டி நூலகர் வட்டம்,முத்துக்குமார் பெரியகுளம் காவல் துணைக் கண்காணிப்பாளர், முனைவர் இரா.ரங்கநாதன், பொறியாளர் நித்தியானந்தம், பொருளாளர், தென்கரை வாசகர் வட்டம், ஆலிம் அஹமது முஸ்தபா தலைவர் வடகரை வாசகர் வட்டம், தெய்வேந்திரன் பொருளாளர் வடகரை வாசகர் வட்டம்,மோகன் தலைவர் கீழவடகரை வாசகர் வட்டம், ஜெயராஜ் பொருளாளர் கீழவடகரை வாசகர் வட்டம்,புரவலர் அய்யாசாமி அரிமா சங்கம்,நல்லாசிரியர் எஸ்.ராஜ்குமார் நிறுவனர் பிரசிடன்சி பள்ளி, பெரியகுளம் எஸ்.பி.முரளி திமுக நகர பொறுப்பாளர்,புரவலர் விடிஎஸ்.ராஜவேலு பொருளாளர் பெற்றோர் ஆசிரியர் கழகம், பொறியாளர் ஆறுமுகம் பெரியகுளம் வளர்ச்சி பேரவை,திருமதி ஜெ. மஹபூப்பீவி பட்டதாரி ஆசிரியர் தலைவர் மகளிர் வாசகர்வட்டம், முனைவர் பத்மினி பாலா பேராசிரியர் பொருளாளர் மகளிர் வாசகர் வட்டம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். மேலும் பெரியகுளம் தாலுகாவிலுள்ள நூலகங்களுக்கு நூலக தந்தை படம்  பெரியகுளம் ராயல் அரிமா சங்கம் தலைவர் சந்திரமோகன், செயலாளர் பாண்டியராஜன், பொருளாளர் பாலசுப்ரமணி ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்வில் நூலகர்கள்,பொதுமக்கள் ,சமூக ஆர்வலர்கள் உட்படஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றினார்கள்.

Comments