கடமலைக்குண்டு கால்நடை மருத்துவமனை பல மாதங்களாகியும் திறக்கப்படவில்லை கால்நடை வளர்ப்போர் வேதனை








தேனி மாவட்டம் ஆண்டிபட்டி கடமலைக்குண்டு கால்நடை மருத்துவமனை பல மாதங்களாகியும் திறக்கப்படவில்லை.





கால்நடை வளர்ப்பவர்கள் கூறுகையில் கால்நடை மருத்துவமனைக்கு டாக்டர்கள் வருவதில்லை. மருத்துவமனை எப்பொழுதும் பூட்டியே   கிடைக்கின்றது. கால்நடைகளுக்கு முறையான மருந்துகள் இங்கு கிடைப்பதில்லை கடமலைக்குண்டு, கரட்டுப்பட்டி, மேலப்பட்டி , பாலுத்து ,தேவராஜ் நகர் ,கொம்பு காரன் புலியூர், அய்யனார்புரம் ஆகிய ஊர்களில் உள்ள விவசாயிகள் கால்நடைகளை வளர்த்து வருகின்றனர் இந்நிலையில்  கால்நடை மருத்துவமனை பல மாதங்கள் ஆகியும் இன்னும் திறக்கப்படவில்லை இதனால் ஆடு   மாடுகள் நோய்வாய்ப்பட்டு இறந்து  வருகின்றன கால்நடை மருத்துவமனை  இருந்தும் பயனில்லாமல் உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்கள் மனவேதனையில் கூறிவருகின்றனர்

Comments